செய்திகள்

போட்டிகளில் தோற்றாலூம் இலங்கை கிரிக்கெட் ஊழலில் முன்னேறுகிறது :என்கிறார் மகிந்தனந்த

கிரிக்கெட் போட்டிகளில் தோற்றாலும் இலங்கை ஊழல்களில் முன்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சி எம்.பி மகிந்தனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) வரவு செலவு திட்டம் தொடர்பான விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எமது ஆட்சி காலத்தில் இலங்கை கிரிக்கெட் ரி-20யில் முதலிடத்திலும் , 50 ஓவர்களில் இரண்டாமிடத்திலும் , டெஸ்ட் தொடரில் மூன்றாமிடத்திலும் இருந்தது. தற்போதைய நல்லாட்சியின் பின்னர் ரி-20யில் 8ஆம் இடத்திலும் , 50 ஓவர் போட்டிகளில் 9ஆம் இடத்திலும் , டெஸ்ட் தொடரில் 6ஆம் இடத்திலும் இருக்கின்றோம். ஆப்கானிஸ்தான் அணியை விடவும் பின்னாலேயே இருக்கின்றது. இப்போது போட்டிகளில் தோல்வியடைகையில் ஊழலில் மேலே சென்றுள்ளோம். தற்போது ஐ.சீ.சீ.எஸ் இலங்கையில் ஊழல் தொடர்பான பிரிவை அமைக்க யோசனைகளை முன்வைத்துள்ளன. இதுவே இன்றைய இலங்கை விளையாட்டுத்துறையின் நிலைலமை. அரசாங்கத்திடம் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்கள் இல்லாமையே இதற்கு காரணமாகும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)