செய்திகள்

மத்தள விமான நிலையத்தில் விமானமொன்றில் தீ!

மத்தள விமான நிலையத்தில் விமானமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
CVK 7042 என்ற விமானத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானம் பறப்பதற்கு தயாராகவிருந்த நிலையில் திடீரென தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் தீயணைப்பு பிரிவினர் அதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் 7 பணியாளர்கள் மாத்திரமே அதன்போது இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)