செய்திகள்

மஹிந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிச்சயமாக போட்டியிடுவார் என அவரின் ஊடக பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பது தொடர்பாக இது வரை தீர்மானிக்கப்படவில்லையெனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இடம் கிடைத்தால் அதில் போட்டியிடுவார் இல்லையேல் வேறு அணியொன்றில் போட்டியிடுவார் என ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகிக்கும் நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு ஜனாதிபதி இணங்காவிட்டால் அவர் கட்டாயமாக வேறு வழியை முன்னெடுப்பார் என்றும் மஹிந்தவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது முடங்கிப் போயுள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.