செய்திகள்

மஹிந்த மீதான விசாரணை 19ஐ சீர்குலைக்கும் திட்டமா? : சம்பிக்க ரணவக்க

19வது அரசியலமைப்பு திருத்தத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளமை சந்தேகத்திற்குறியதென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
19வது திருத்தத்தை நிறைவேற்றாது குழப்ப நிலையை ஏற்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கம் இதில் இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இவ்வாறாக அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளாது அவசரமாக தேர்தலொன்றை நடத்தி அதில் அரசியல் லாபம் பெரும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் ஈடுபட்டு வருவது போன்றே தங்களுக்கு தெரிவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இன்று ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் செயலாளரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.