செய்திகள்

முத்தரிப்புத்துறை கிராமத்திற்கு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் விஜயம்-அச்ச சூழ்நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும் நடவடிக்கை.

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை வீரர்கள் குறித்த கிராம மக்களினால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையினை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை(21) மாலை முத்தரிப்புத்துறை கிராமத்திற்கு சென்றிருந்தார்.
முத்தரிப்புத்துறை கிராமத்திற்கு சென்றிருந்த அவர் முத்தரிப்புத்துறை செங்கோல் மாதா ஆலய வளாகத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
முத்தரிப்புத்துறை பங்குத்தந்தை அருட்தந்தை டெனி அடிகளார் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜெயசேகர,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி லோகு,அருட்தந்தையர்கள்,கிராம அலுவலகர் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு   முத்தரிப்புத்துறை பகுதியில் இடம் பெற்ற சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலவரம் தொடர்பாகவும், சம்பவத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் முத்தரிப்புத்துறை கிராமத்தில் உள்ள மக்கள் தற்போது கடற்படையினரின் செயற்பாட்டிற்கு அச்சத்தில் இருப்பதாகவும், மீனவர்கள் மீதான கடற்படையினரின் கெடுபிடிகள்,வீதிகளில் சோதனைகள் மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதன் போது முத்தரிப்புத்துறை கிராம பகுதியில் அச்ச நிலை காணப்படுகின்ற இடங்களுக்கு உடனடியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், கடற்படையினரின் கெடுபிடிகள் குறித்து கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து மக்களின் அன்றாட நடவடிக்கை வழமைபோன்று செயற்பட உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,இனி வரும் காலங்களில் குறித்த கிராமத்திலோ அல்லது வீடுகளிலோ சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் காணப்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யவும் அல்லது சந்தேக நபர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கவும்.
மாறாக அவர்களை பிடித்து தாக்கி காயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு போதும் ஈடுபட வேண்டாம்.அது சட்டத்திற்கு முறனானது.
தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டிலே இக்கிராமத்தைச் சேர்ந்த 11 பேரின் பெயர் விபரங்கள் எமக்கு வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் தனது கமையை செய்கின்றது.எனினும் இக்கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை நான் மேற்கொள்ளுகின்றேன் என வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் கவனத்திற்கு சில விடையங்களை தெரிவித்தார்.
முத்தரிப்புத்துறை கிராம மக்கள் இது வரை தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.இக்கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-மேலும் எத்தனைபேர் இவ்வாறு கைது செய்யப்படுவார்கள் என மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தொடர்ந்தும் இக்கிராமத்தில் உள்ள மக்களை கைது செய்யாது ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேருடன் குறித்த வழக்கை கடற்படையுடன் பேசி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடற்படையினரின் புலனாய்வுத்துறையினரினால் இன்னும் பலரது பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
தொடர்ந்தும் கைது செய்கின்ற நடவடிக்கை தொடருமாக இருந்தால் மேலும் மேலும் மக்கள் மத்தியில் அச்ச நிலையும்,மனநிலை பாதீப்பும் ஏற்படும்.
எனவே பொலிஸார் கடற்படையுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பேருடன் குறித்த பிரச்சினையை நிறைவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
DSC_0008 DSC_0013 DSC_0019 DSC_0040 DSC_0048
N5