செய்திகள்

முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.இந்த ஊர்வலம் இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.இதன்போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்கக் கோரி, குறித்த வாகனப் பேரணியை நேற்று ஆரம்பித்திருந்தனர்.கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.இதனையடுத்து இப்பேரணி கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. குறித்த பேரணி மன்னார் வவுனியா, நீர்கொழும்பு ஊடாக கொழும்பைச் சென்றடையவுள்ளது.(15)