செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இக் காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் இலங்கை மற்றும் புலம்பெயர் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.32803941_639626966381895_6980951577045499904_n

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும். அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இடம்பெற்று வருகின்றனஇம்முறை பெரும் எதிர்பார்ப்பில் இடம்பெறவிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது.widows_displaced

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மிகஅமைதியான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.(15)