செய்திகள்

மைத்திரியின் சகோதரர் மீது குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன பொலனறுவையில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல்அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக ஜே.விபி குற்றம்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சட்டவிரோத மணல்அகழ்வை தடைசெய்துள்ள போதிலும் அவரது சகோதரர் தொடர்ந்தும் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஜே.விபி யின் பொலனறுவை பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கந்தை மன்னம்பிட்டியில் இது நடைபெறுகின்றது,லொறிகள் மணல்களை கொண்டுசெல்கின்றன,ஜனாதிபதிக்கு இது தெரியாமல் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜனாதிபதியின் சகோதரர் இதனை நிராகரித்துள்ளார். தனக்கும் மன்னம்பிட்டியில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சகோதரர் மீது இந்த குற்றச்சாட்டு கடந்த ஆட்சிகாலத்திலிருந்தே முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.