செய்திகள்

யாழில் அதிக வெப்­பம் காரணமாக குளிர்­மைக்­காக மது அருந்­தி­னாராம் ஆசி­ரி­யர்

கோப்­பாய் பொலிஸ் பிரி­வில் வீதிப் போக்­கு­வ­ரத்துக் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸா­ரால், ஆசி­ரி­யர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.மது­போ­தை­யில் வாக­னம் செலுத்­தி­னார் என்று அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த அவர், நீதி­மன்­றில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­டார். அதன்­போதே வெப்­பம் அதி­க­மாக உள்­ள­தால் குளிர்­மைக்­காக ஆசி­ரி­யர் மது அருந்­தி­னார். ஆனால் அவர் குடி­கா­ரர் இல்லை” என்று யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத் தப்­பட்ட ஆசி­ரி­யர் சார்­பில் சட்­டத்­த­ரணி தெரி­வித்­தார்.

ஆசி­ரி­ருக்கு 7 ஆயி­ரத்து 500 ரூபா தண்­டம் விதித்­தது. ஆயி­ரத்து 500 ரூபா அரச செல­வாக அற­வி­டு­மா­றும் மன்று உத்­த­ர­விட்­டது. ஆசி­ரி­ய­ரின் சாரதி அனு­ம­திப் பத்­தி­ரத்தை 9 மாதங்­க­ளுக்­குத் தடுத்­து­வைக்­கு­மா­றும் நீதி­மன்ற பொலி­ஸா­ருக்கு மன்று கட்­ட­ளை­யிட்­டது.(15)