செய்திகள்

யாழ்மாவட்டத்தில் பாத்தீனிய பரம்பல் சடுதியாக அதிகரிப்பு.

யாழ்மாவட்டத்தில் தற்போது அனைத்து இடங்களிலும் பாத்தீனியத்தின் பரம்பல் அதிகரித்துள்ளது.தற்போதைய சூழ்நிலையில் யாழ்மாவட்டம் முழவதிலும் மிகவும் அதிகளவில் இந்த பயிர் வளர்ந்து நிற்கிறது, இந்த செடியினால் ஒவ்வாமை, சரும நோய்கள், ஈழை நோய், குருதி செவ்வணு நலிவு போன்ற நோய்களை ஏற்படுகிறது, அதுமட்டுமல்லாமல் இந்த செடிக்கு விளைநிலங்களை மலடாக்கும் தன்மையுள்ளதோடு வளிமண்டலத்தையும் மாசு படுத்துகிறது.ஆனால் யாழ்மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாத்தீனிய ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.வடமாகாணத்தில் பார்த்தீனிய செடிகளை அழிப்பதற்கு என அண்மையில் நான்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள், நாமும் முடிந்தவரை நமது வீடுகளிலும் அயலிலும் இந்த செடியை வளரவிடாமல் செய்ய வேண்டும்.குறிப்பாக யாழ் பருத்தித்துறை வீதியின் இருமருங்கிலும் அமைந்துள்ள தோட்ட பகுதியில் பாத்தீனிய செடி அதிகளவில் காணக்கூடியதாகவுள்ளது.