செய்திகள்

ரஸ்ய பெண் சட்டத்தரணியை சந்தித்தாரா டிரம்பின் மகன்- அமெரிக்காவில் புதிய சர்ச்சை

ஹிலாரி கிளின்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த ரஸ்யாவின் சட்டத்தரணியொருவரை நான் சந்திதேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகன் தெரிவித்துள்ள கருத்து அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எனினும் நட்டாலியா வெசெல்ன்டிஸ்கயா என்ற ரஸ்ய பெண் சட்டத்தரணி வாக்குரஸ்ய பெண் சட்டத்தரணியை சந்தித்தாரா டிரம்பின் மகன்- அமெரிக்காவில் புதிய சர்ச்சை
றுதியளித்தபடி எந்த தகவலையும் வழங்கவில்லை எனவும் டிரம்பி;ன் மகன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் மருமகன் ஜாராட் குஸ்னரும் பிரச்சார பிரிவின் தலைவரும் அந்த சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் டிரம்பின் மூத்த மகன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடுவது உறுதியாகி இரண்டு நாட்களிற்கு பின்னர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சந்திப்பின்போது ரஸ்ய பெண் சட்டத்தரணி ஹிலாரி கிளின்டனிற்கு ஆதரவளிக்கும் ரஸ்யர்கள் குறித்த தகவல்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார் ஆனால் அவரது கூற்றுக்கள் ஆதாரமற்றவையாக அர்த்தமற்றவையாக காணப்பட்டன அவரிடம் குறிப்பிடப்படத்தக்க தகவல்கள் எதுவும் இல்லை என்பது எனக்கு விளங்கியது எனவும் டிரம்பின் மகன் தெரிவித்துள்ளார்
குறிப்பிட்ட சந்திப்பு குறித்து நியுயோர்க் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்த நிலையிலேயே டிரம்பின் மகன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்
இதேவேளை குறிப்பிட்ட பெண் சட்டத்தரணியும் கருத்து வெளியிட்டுள்ளார் குறிப்பிட்ட சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை நான் ரஸ்யா சார்பில் செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்