செய்திகள்

வடக்கு – கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி தலைமையில் செயலணி

வடக்கு , கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் , ஒருங்கிணைத்தல் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்காக ஜனாதிபதி தலைமையில் செயலணி அமைக்கப்படவுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் கோட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இந்த விடயத்தை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் நிலைமை முடிவிற்கு வந்ததை தொடர்ந்து அந்த மாகாணங்களில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக பல திட்டங்கள் சமகால நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறிருந்த போதிலும் அவ் மாகாணங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைநிலையை மேம்படு;த்த இந்த திட்டங்களின் மூலம் குறிப்பிடத்தக்க அழுத்தம் ஏற்பட்டுள்ளமை கண்காணிக்கப்படவில்லை. இதனால் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மதிப்பீடுசெய்தல், இணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்தல் மற்றும் அதன் அடிப்படையை வகுக்கும் பொருட்டு தனது தலைமைத்துவத்தின் கீழ் மற்றும் கௌரவ பிரதமர் மாகாண ஆளுநர்கள் , மாகாண தலைமை செயலாளர்கள், முப்படைத்தளபதிகள், மற்றும் இலங்கை பொலிஸிற்கு உட்பட்ட மாகாண பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கொண்ட செயற்பாட்டு படையணியொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. -(3)