செய்திகள்

வவுனியாவில் திருட்டு குற்றச்சாட்டில் ஐவர் கைது

வவுனியா, கல்மடு சாளம்பன் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை வவுனியா பொலிசார் நேற்று கைதுசெய்து நீதி மன்றில் முன்னிலை படுத்தியுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி வவுனியா கல்மடு சாளம்பன் பிரதேசத்தில் வீடு ஒன்றில் அதிகாலை வேளையில் புகுந்த சிலர் இருபது இலட்சம் பெறுமதியான நகை மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை திருடிச்சென்றிருந்தனர். இது தொடர்பில் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோன் அவர்களின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணான்டோ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் கோறலே கெதர பொலிஸ் சாஜன்களான பம்பர தெனிய (2131), அத்தநாயக்க (27225), யேசுதாசன் (42521), கான்ஸ்டபிள்களான பண்டார (33047), ,ஜீவானந்தம் (45401), கருணாதிலக (52391), சமரசிங்க (54848), ரணதுங்க (51246), நிசாந்த (59517), வீரசேன (78448), கொலின் (89353), பொலிஸ்சாரதி பண்டார(80891) ஆகியோர் உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மன்னார் பகுதியை சேர்ந்த 3 முஸ்லிம் இளைஞர்கள்,
திருகோணமலை மற்றும் வவுனியாவை சேர்ந்த ஒவ்வொருவர் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இவர்கள் மீது முன்னரும் பல குற்றசாட்டுகள் பதிவு செய்யபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

N5