செய்திகள்

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம்!

வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (20.02) காலை 9.30மணியளவில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

களப்பணியில் ஈடுபடும் 64 பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு இதன்போது லப்டொப் கணணி வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இவ் செயற்த்திட்டத்தின் நான்காம் கட்டமே இன்று வவுனியாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரன், வடமாகாண சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் கேசவன், ஆசிய டன்ற குழுத்தலைவர் எஸ். சுபாகரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.பவானி, பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள், பிராந்திய சேவைகள் பணிமணையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_1162 DSC_1163 DSC_1164

N5