செய்திகள்

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் சாதனை

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது.


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப் போட்டியை கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை என்பன இணைந்து “சில்ப நவோத 2018” கைப்பணிப் போட்டியை நடாத்தியது.

இதில் அகில இலங்கை ரீதியில் பல பாடசாலைகள் பங்கு பற்றின. வடமாகாணத்தில் கலந்து கொண்ட பாடசாலைகளில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நொச்சிமோட்டை கனிஷ்ட
உயர்தர வித்தியாலயம் அதிக வெற்றிகளை தனதாக்கிக்கொண்டது.

அந்த வகையில் சிரேஷ்ட பிரிவில் செல்வி.உ.ரதுஜினி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும்,கனிஸ்ட பிரிவில் செல்வி.பி.பிரியகெளரி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், செல்வன்.தி.கபிசன் ஆறுதல் பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.

இப்பரிசுகள் திங்கள் கிழமை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.

IMG_0353[1]

IMG_0351[1]

N5