செய்திகள்

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் விடுக்கும் சந்திரகிரகணமும் தைப்பூச நாள் பற்றியதுமான அறிவித்தல்



தைப்பூச நாள் பற்றி மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை தீர்க்க வேண்டிய கடமை எமதாகும். எனவே அது பற்றிய ஒரு பார்வை 31.01.2018 புதன் கிழமை தைமாதப் பௌர்ணமி அன்றைய தினம் தைப்பூச நன்நாளாகும். பஞ்சாங்களில் கூட சுபதினங்களுக்கு நாளைய தினம் முற்றுமுழுதாக ஏற்ற நாளில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எனவே அந்தணர் ஒன்றியமும் அனைத்து சுபகாரியங்களையும் நடத்துவதில்லை என முடிவு எடுத்துள்ளது.

வழமை போல் வழமையாக நடைபெறுகின்ற ஆலய விழாக்கள், அபிஷேகங்கள் மட்டும் இடம் பெறும். 

அன்றைய தினம் சந்திர கிரகணம் அதனால் ஆலயங்களில் எந்த விஷேட வழிபாடுகளும் இடம்பெறமாட்டாது

. ஏடு தொடக்கல், குழந்தைகளுக்கு உணவு ஊட்டல், புது மனை விழாக்கள், திருமணம், ஆலய கும்பாபிஷேகங்கள், அத்திவாரமிடல், இன்னும் சுப காரியங்கள் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
 
அன்றைய தினம் சிரார்த்தம் செய்பவர்கள் தை மாதப் பௌர்ணமியை திதியாக கொண்டவர்கள் அடுத்த நாள் அச்சிரார்த்தத்தினை செய்யவும்.

பஞ்சாங்கத்திலும் குறிப்பிட பட்டுள்ளது. 

கிரகண ஸ்பரிசமானது மாலை 5.18 முதல் ஆரம்பிக்கின்றது. 
கிரகண ஆரம்பம் 6.23 முதல்
முடிவு 7.39 மணி வரை
கிரகண மோட்ஷம் 8.42 வரைக்கும்

தோஷ நட்சத்திரங்கள் புனர்பூசம்4ம் கால், பூசம், ஆயிலியம், அனுசம், கேட்டை, மூலம் பூராடம், உத்தராடம்1ம் கால், உத்தரட்டாதி, ரேவதி என்பனவையாகும்.
 அன்றைய தினம் கிரகண காலத்தில் வெற்றுக் கண்ணால் பார்காது ஈரத்துணியின் மூலமோ, நீர் நிலைகளில் கண்டோ அவதானிக்கலாம். 

கிரகண காலத்தில் உணவுப் பண்டங்களை உண்ணல் தவிர்க்கப்பட வேண்டும்.

அக்காலத்தில் ஆலயங்கள் மூடியிருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் இக்காலத்தே வெளியில் செல்லல் தவிர்க்கவும். இக்காலத்தில் குடும்ப உறவுகள் கொண்டால் ஊனமுடைய அல்லது சித்தப் பிரமை படித்த குழந்தைகள் பிறக்கும்.
 
கிரகண காலம் முடிந்த பின்னர் ஆலயங்கள் திறக்கப்பட்டு பிராயசித்தங்களின் பின்னர் பூஜைகள் மேற்கொள்ளப்படும். தர்பணங்கள் செய்யலாம்.
 
ஆகமொத்தத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யலாகாது. பூரணமாக வாக்கிய பஞ்சாங்கம் 84ம் பக்கத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

N5