செய்திகள்

விக்னேஸ்வரனா அடுத்த முதலமைச்சர்? அப்படியில்லை; இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லையாமே? அப்படித்தான்- சம்பந்தன் அளித்த பதில்கள்

வட மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தானா முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம்பெறுவர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ‘அப்படியில்லை’ என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை தமிழ் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றின்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு போதிய அழுத்தம் எதுவும் இப்பொது கொடுப்பது இல்லையாமே என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு “ஆம் அப்படிதான் ” என்று உடனடியாக பதிலளித்த சம்பந்தன், பின்னர் சுதாரித்துக்கொண்டு, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவுக்கு அதிக கரிசனை இருக்கிறது இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.

Sampanthan meets Tamil journalists (1) Sampanthan meets Tamil journalists (2) Sampanthan meets Tamil journalists (3)