செய்திகள்

வீட்­டுத்­திட்ட வீடு­க­ளில் பய­னாளி வசிக்­கா­விட்­டால் அவற்றை அதி­கா­ரி­கள் மீளக் கைய­கப்­ப­டுத்­த­வேண்­டும்

யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்­டத்­தில் வீட்­டுத்­திட்ட வீடு­க­ளில் பய­னாளி வசிக்­கா­விட்­டால் அவற்றை அதி­கா­ரி­கள் மீளக் கைய­கப்­ப­டுத்­த­வேண்­டும் தீர்­மா­னம் மேற்­கொள்­ளப்­பட்­டது.
யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த காலங்­க­ளில் முஸ்­லிம் மக்­க­ளின் மீள் குடி­யேற்­றத்­துக் காக வழங்­கப்­பட்ட வீடு­க­ளில் 20 வீடு­கள் பூட்­டிய நிலை­யில் உள்­ள­து­டன் 5 வீடு­கள் வாட­கைக்­குக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன என ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட பிர­தி­நி­தி­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.இது தொடர்­பில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் பரஞ்­சோதி தெரி­விக்­கை­யில்,
யாழ்ப்­பா­ணத்­தில் முஸ்­லிம் மக்­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட வீட்­டுத்­திட்­டப் பய­னா­ளி­கள் தெரி­வின்­போது பல முறை­கே­டு­கள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் பிர­தேச செய­லக அதி­ கா­ரி­கள் தங்­க­ளுக்கு ஏற்ற பய­னா­ளி­க­ளைத் தெரிவு செய்து வீடு­களை வழங்­கி­யுள்­ள­னர். இத­னால் நியா­ய­மா­கவே வீடு­கள் கிடைக்க வேண்­டிய முஸ்­லிம் மக்­கள் பெரி ­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.
பொது­மக்­க­ளுக்கே குடி­யி­ருக்க வீடு­கள் வழங்­கப்­ப­டாத நிலை­யில் கிராம சேவை­யா­ள­ருக்கு வீட்­டுத்­திட்­டம் வழங்­கி­யது சரியா? – என்­றார். இதற்­குப் பதி­ல­ளித்த பிர­தேச செய­லர், நாங்­கள் வீட்­டுத்­திட்­டம் வழங்­கும்­போது கடைப்­பி­டிக்­க­வேண்­டிய சகல விட­யங்­க­ளை­யும் ஆராய்ந்தே அவை வழங்­கப்­பட்­டன. இதில் உங்­க­ளுக்கு ஏதா­வது சந்­தே­கம் இருந்­தால் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக நீங்­கள் எங்­க­ளி­டம் அறிந்­து­கொள்­ள­லாம்-­­ – என்­றார்.
இறு­தி­யில் அனைத்து வீட்­டுத்­திட்­டப் பய­னா­ளி­க­ளும் வழங்­கப்­பட்ட வீடு­க­ளில் வசிக் கா­து­விட்­டால் அதனை மீள்­ப­ரி­சீ­லனை செய்து கைய­கப்­ப­டுத்த வேண்­டும் எனத் தீர்­மா­னம் மேற்­கொள்­ளப்­பட்­டது.இதனை யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டத்­துக்­கும் அனுப்பி வைப்­ப­தாக ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டத்துக்­குத் தலைமை வகித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் அறி­வித் தார்.