செய்திகள்

வேட்பாளர் தயார்? : ரணில் நாடு திரும்பியதும் அறிவிக்கப்படுவார்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் 3 நாள் விஜயத்தை மேற்கொண்டு நாளை மாலைதீவு செல்லவுள்ளார். இவர் வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளார். இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமையளவில் வேட்பாளர் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. -(3)