செய்திகள்

வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி அரச வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடையும் நிலைமை காணப்படுகின்றது.
சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக இன்று காலை முதல் அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)