செய்திகள்

ஹட்டனில் சத்தியாக்கிரகத்திற்கு தீர்மானித்துள்ள த.மு.கூ

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் ஹட்டனில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் அவரால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இம்முறையும் தோட்டத்தொழிலாளர்கள் அப்பட்டமாக காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர். 40 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்துவிட்டது என தொண்டமானும், வடிவேல் சுரேஷும் கூறினாலும் வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வே கிடைத்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 1ஆம் திகதி நான் பிரதமரை சந்திக்கவுள்ளோம். அதன்போது தொழிலாளர்களுக்குறிய 140 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனை வழங்குவது தொடர்பாக கோரிக்கையை முன்வைப்போம். அது வெற்றியளிக்காவிட்டால் அதன் பின்னர் எமது 6 எம்.பிக்களும் ஹட்டனில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுப்போம். என தெரிவித்துள்ளார். -(3)