ஹட்டன் மல்லியப்பூவிலுள்ள வாடி வீட்டில் தீ!
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள வாடி வீடு ஒன்றில் தீ பரவியுள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கேயா நகரசபைக்கு உரிய வாடி வீடே இவ்வாறாக எரிந்துள்ளது.
குறித்த வாடி வீட்டில் திடிரென தீ பற்றியமையால் பகுதி அளவில் குறித்த வாடி வீடு எறிந்து நாசமாகியுள்ளது.
ஹட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த வாடி வீடு சில காலமாக மூடிய நிலையில் காணப்பட்டதுடன் அதற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியபடவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -(3)