செய்திகள்

1669 மதரஸாக்களும் 317 அராபிய பாடசாலைகளும் பதிவு

நாடு முழுவதிலும் 1669 இஸ்லாமிய மதரஸாக்களும் 317 அராபிய பாடசாலைகளும் முஸ்லிம் மத மற்றும் கலாசார திணைக்களத்தின் கேள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் எம் ஆர். எம் மலிக் தெரிவித்தார்.

ஆனாலும், இந்த பாடசாலைகளை மேற்பார்வை செய்வது தமது திணைக்களத்தின் பொறுப்பு அல்ல என்றும் இது பொருத்தமான அரச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

பதிவு நடவடிக்கைகளின்போது பாடவிதானங்கள் பார்வையிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.