செய்திகள்

20க்கு எதிராக நீதிமன்றம் சென்ற கம்மன்பில

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் ஜே.வி.பியினரால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருத்தத்தில் சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் இதனால் அதனை அரசியலமைப்புக்கு முரனானது என அறிவிக்குமாறு கோரியே அவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. -(3)