செய்திகள்

21ஆம் நூற்றாண்டின் நீண்டநேர சந்திரகிரகணம் : ஜூலை 21இல்

21ஆம் நூற்றாண்டில் இடம்பெறவுள்ள நீண்டநேர சந்திரகிரகணத்தை காணும் சந்தர்ப்பம் எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி கிடைக்கும் என்று space என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த முழு சிகப்பு சந்திர கிரகரணம் ஒரு மணித்தியாலம் 43 நிமிடங்களிற்கு இடம்பெறக்கூடும் என்று அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த முழுமையான சந்திர கிரகணம் ஆபிரிக்கா ,மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ,இந்துமா சமுத்திர வலயத்திற்குட்பட்ட நாடுகளில் தெளிவாக காணக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அடுத்த சந்திரகிரகணம் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. -(3)