செய்திகள்

சோஷலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பொலிஸாரால் கைது!

சோஷலிச மாணவர் சங்க தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இவர், கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சோஷலிச மாணவர் சங்கமானது ஜே.வி.பி தலைமையில் இயங்கும் சங்கங்களில் ஒன்றாகும்.

-(3)