சைற்றம் நிறைவேற்று அதிகாரிக்கு தொடர்ச்சியாக வந்த அச்சுறுத்தல்கள்
சைற்றம் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் தனக்கு கடந்த சில நாட்களாக தொலைபேசி மூலமாகவும் மற்றும் கடிதங்கள் மூலமாகவும் ஏற்கனவே இனந்தெரியாத குழுவினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் இதனை தொடர்ந்தே நேற்றைய தினம் தனது வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சைற்றம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் சமீர சேனரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பென்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனக்கு கடந்த சில நாட்களாக தொலைபேசி மூலமும் மற்றும் கடிதங்கள் மூலமும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. குறித்த பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்தே அவற்றில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த 3ஆம் திகதி நான் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தேன். அத்துடன் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்திருந்தேன. இவ்வாறான நிலையிலேயே நேற்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




