செய்திகள்

சைற்றம் பணிப்பாளரின் கார் மீது துப்பாக்கி சூடு

சர்ச்சைக்குறிய மாலபே சைற்றம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் சமீர சேனாரட்னவின் வாகனம் மீது இனந்தெரியாத குழுவொன்றினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு இவர் தனது காரில் வீட்டை நோக்கி பயணித்த போது மாலபே நெவில் பெர்னான்டோ வைத்தியசாலைக்கு அருகில் முகத்தை மறைத்தவாறு வந்த குழுவொன்று அந்த காரின் மீது துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. பொலிஸார் அந்தப் பகுதிகளிலுள்ள சீ.சீ.ரி.வி வீடியோக்களை ஆராய்ந்து வருகின்றனர். -(3)