செய்திகள்

சோபித்த தேரரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படாமை தொடர்பாக நீதிமன்றம் அறிக்கை கோரியது

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளரான மாதுலுபாவே சோபித்த தேரரின் மரணத்தின் பின்னர் அது தொடர்பான மரண விசாரண நடத்தப்படாமை தொடர்பாக விசாரணை நடத்தி அது தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ஹிஹான்பிலபிட்டிய நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அணில்ஜயசிங்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உடுவே தம்மாலோக்க தேரரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குற்ற விசாணை திணைக்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நேற்று நீதவான் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையை தயாரிக்கும் போது சோபித்த தேரருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் , கொழும்பில் அவர் அனுமதிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சிங்கப்பூர் வைத்தியசாலையில் அறிக்கைகள் ஆகியன தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 n10