செய்திகள்

சோமாலியா கடற்கொள்ளையர்களின் பிடியிலுள்ளவர்கள் விடுக்கும் கோரிக்கை

தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலை சுற்றி நிற்கும் சோமாலியா பாதுகாப்பு படையினரை விலகிச் செல்லூமாறும் இல்லையேல் தங்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுமெனவும் சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ள கப்பலிலுள்ள இலங்கையர்கள் ஊடகங்களினுடாக கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
சோமாலியாவுக்கு அருகில் கடற்பரப்பில் கடத்தப்பட்ட கப்பல் நங்கூரமிட்டுள்ள நிலையில் அந்த கப்பலுக்கு அருகில் பாதுகாப்பு படையினர் சென்றுள்ள நிலையில் அதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையே நடக்கும் பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து கப்பலிலுள்ள கடத்தல் காரர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இலங்கையிலுள்ள ஊடகங்களுக்கு தொடர்பு கொண்டு கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு படையினர் சூடு நடத்தும் போது தங்களையே உள்ளே உள்ள கடத்தல் காரர்கள் முன்னால் அனுப்புவதாகவும் இது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)