சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டது.
அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)




