சோலன்ட் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது
சோலன்ட் என்ற உலகின் பழமைவாய்ந்த கப்பல் நோர்வேயிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
எதிர்வரும் 30ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்கும்
கடல்சார் கற்கை நெறிகளை பயிலும் இலங்கை மாணவர்களுக்கும்; கப்பலில் வருகை தந்துள்ள 70 மாணவர்களுக்கும் இடையில் அனுபவப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வுகள் இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
1927ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கப்பல் செல்லவுள்ள 22 நாடுகளின் 44 துறைமுகங்களுள் கொழும்பு துறைமுகமும் ஒன்றாகும். -(3)




