ஜனநாயக போராளிகள் கட்சி நாளை இந்தியாவுக்கு பயணம்
ஜனநாயக போராளிகள் கட்சி நாளை இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜனநாயக போராளிகள் கட்சி பிரதிநிதிகள் அரசியல் உயர்மட்டங்களையும் சந்தித்து வடக்கு கிழக்கு அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருட இறுதிப்பகுதியில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனநாயக போராளிகள் கட்சி நாடு திரும்பியிருந்தார் நிலையில் உள்ளூராட்சி தேர்தலிலும் பங்கேற்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்தது.
இந் நிலையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக உள்ளூராட்சி தேர்தலிலும் ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கியுள்ளது.(15)




