செய்திகள்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே முரண்பாடுகள் கிடையாது : ராஜித

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவித கருத்து முரண்பாடும் இல்லை எனவும் தனது உரையை ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பாக ஜனாதிபதி அவரை சந்தித்து கலந்துரையாடுவார் எனவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தினார். பாதுகாப்பு கடற்படை அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டு பாதுகாப்பு சின்னங்களுடன் சிறைக்கூடங்களில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கையானது அனைத்து பாதுகாப்பு படையினரையும் அவமதிக்கும் நிகழ்வாகவே அமைந்துள்ளது. தாம் தேசப்பற்றுள்ளவர்கள் என்று பெருமிதத்துடன் கூற்றுக்களை தெரிவித்து வருவோர் மத்தியில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது இராணுவத்தின் மத்தியில் ஜனாதிபதிக்குள்ள ஈடுபாட்டை குறைத்து மதிப்பிடுவதாகவே அமையும்.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற நீதியிலும் படைகளில் தளபதி என்ற ரீதியிலும் ஜனாதிபதி இது விடயத்தில் பெரும் கவலை கொண்டுள்ளார். இதனை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி தனது மனத்தாங்கலை அந்த உரையில் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இதனை செய்தியிட்ட ஊடக நிறுவனங்கள் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டதையும் இணைத்து தவறான கண்ணோட்டத்தில் வெளியிட்டிருப்பதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கோ பிரதமருக்கோ எதிரானவை அல்ல . நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு 16 மாத காலம் முடிந்துள்ளது. சட்ட விசாரணை என்ற அடிப்படையில் பாரிய மோசடிகள் மேற்கொண்டவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
வாகனம் தொடர்பான சிறிய குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் பௌசி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விசாரணை பயிற்சி பெறும் 15 பயிற்சியாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் பௌசி முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர். நீண்டகால அரசியல்வாதி கௌரவம் மிக்கவர் முன்னனைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகத்தினர் பெரும் அச்சத்துடன் வாழ்ந்த வந்தனர். இந்த அச்சம் நீங்கவேண்டும் என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் அமைப்பதில் பெரும் பங்களிப்பு செய்தனர். இவ்வாறான சூழ்நிலையில் இத்தகைய சம்;பவம் இடம்பெறுவது அவர் சார்ந்த சமூகத்தின் மத்தியில் எவ்வாறான நிலையை தோற்றுவிக்கும் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் . நல்லாட்சி அரசாங்கம் அமைத்த நாம் ஊழல்களுக்கெதிரானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு முயற்சித்த போதிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவினர் இவ்வாறான சிறிய குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைளை மேற்கொள்ளுகின்றனர். முன்னைய அரசாங்க காலப்பகுதியில் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருந்திருந்தவர்களின் தகவல்களை நாம் வழங்கினோம் இதுவரையில் இதில் நடவடிக்கையுமில்லை. விசாரணை என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. -(3)