ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிதி தேர்தல் காலத்தில் அப்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவினதும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரசிங்கவினதும் போலி கையெழுத்துகளுடன் போலி ஆவணங்களை காட்சிப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே இவர்களுக்கு நீதிமன்றத்தினால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இன்றைய தினம் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் இன்றைய தினம் ஆஜராக முடியாது போயுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து அவர்களை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)




