செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக சதி : போலி ஜாதக கணிப்பு வீடியோ தொடர்பாக விசாரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக இணையத்தளங்களில் பரப்பப்படும் ஜாதகக் கணிப்பு வீடியோ தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரான நிமால் போபகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சிறிசேன ஜனவரி 26 ஆம் திகதிக்குப் பின்னர் உயிரோடு இருக்க மாட்டார் என தெரிவித்து சில நாட்களாக இணையத்தளங்களில் வெளியாகும் வீடியோ தொடர்பாக இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த வீடியோவின் பின்னணியில் பாரிய ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும் மேற்படி ஜாதகக் கணிப்பானது உண்மைக்குப் புறம்பானது என்றும் அவருடைய ஆவணங்களை வைத்துப் பார்க்கையில் அப்படியான எந்தவொரு பிரச்சினையும் ஜனாதிபதிக்கு இல்லை எனவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தவேளை அவரை துப்பாக்கியால் தாக்கிய கடற்படை சிப்பாயே சிறைவாசத்துக்குப் பின்னர் ஜோதிடராக மாறி இவ்வாறாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)