ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகும் ஜே.வி.பி!
உள்ளூராட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
இதேவேளை நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக, எதிர்வரும் தினங்களில் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
அதே போன்று அரச அதிகாரிகள் தேர்தலை நடத்துவதில் தடையாக செயற்படுகின்றமை தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம் எனவும் மக்களின் வாக்குரிமையை பாதுகாத்து இறையான்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே அதே போன்று தேர்தல் தொடர்பாக நீதிமன்ற உதரவுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படாது என அறிவித்த ஜனாதிபதிக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
-(3)




