ஜனாதிபதியிடமிருக்கும் இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் : ஜே.வி.பி
மகிந்த ராஜபக்ஷ தொடர்பான ரகசியங்களை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டால் மகிந்த தொடர்பான சகல இரகசியங்களையும் வெளியிடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்தறையில் நடைபெற்ற அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தி விழாவில் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து வெளியிட்ட போது அனுரகுமார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கூறிய இரகசியங்கள் என்ன அவற்றை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்வாறான இரகசியங்களை வெளியிடாது வைத்திருப்பது குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார். -(3)




