செய்திகள்
ஜனாதிபதியினால் விரைவில் முக்கிய தீர்மானம் : அமைச்சரவையிலும் மாற்றம் வருமாம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசாங்கம் தொடர்பாக விரைவில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் நிலைமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்படி விரைவில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹாலிஹெல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)




