செய்திகள்

ஜனாதிபதியின் கருத்து குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தை கொண்டதல்ல : துமிந்த திஸாநாயக்க

குற்றப் புலனாய்வு பிரிவு , நிதி மோசடிபொலிஸ் விசாரணை பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியன தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தானது குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கருத்து அல்ல என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக எந்த முரண்பாடும் அரசாங்கத்திற்குள் கிடையாது. ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கான காரணம் தொடர்பாக மக்களுக்கு விரைவில் புரிந்துக்கொள்ளலாம். யாரும் அவரின் கருத்தை தவறாக பார்க்க வேண்டாம். குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் அந்த கருத்து வெளியிடப்படவில்லை. திருடர்களை பிடிக்க வேண்டாமென ஜனாதிபதி எந்த இடத்திலும் கூறவில்லை. இதனால் யாரும் வீணாக குழப்பமடைய தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார். -(3)