ஜனாதிபதியின் சகோதரரை தாக்கியவர் பொலிஸில் சரண்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேனவை கோடாரியினால் தாக்கி காயப்படுத்தியவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். நேற்றிரவு பொலனறுவை பிரதேசத்தில் வைத்து ஜனாதிபதியின் சகோதரரும், பிரபல மணல் வியாபாரியுமான பிரியந்த சிறிசேன மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சம்பவம் நடைபெற்று சில மணி நேரத்திலேயே பக்கமுன காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சந்தேக நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேன விசேட ஹெலிகொப்டர் மூலம் பொலனறுவை தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.




