செய்திகள்
ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் வவுனியாவில் திறப்பு!
ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகத்தை வவுனியாவில் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
இதன்போது, யுத்த காலத்தில் சொத்துக்கள் சேதமடைந்த குடும்பங்களுக்கு காணி உறுதிகள் மற்றும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
வவுனியா கலாசார மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.
-(3)




