செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை சிதறடிக்கவென களமிறங்கும் வேட்பாளர்களுக்கு தடை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை சிதரடிக்கும் நோக்கில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.
சில வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வேறு வேட்பாளர்களுக்கு உதவும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் தொடர்பாக வாக்காளர்களுக்கு அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவ்வாறான வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் நிறுத்தப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறாக அறிவித்துள்ளார். -(3)