ஜனாதிபதி , பிரதமர் , எதிர்க்கட்சி தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் விடுதலை
போலி முகப்புத்தகத்தின் ஊடாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைதான இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை விடுவிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் எதிர்ப்பு தெரிவித்த போதும் , அவரை ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்க நீதவான் அருணி ஆடிகல உத்தரவிட்டுள்ளார்.
றத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த இளைஞன் போலி முகப்புத்தக கணக்கினை நடத்திச் சென்றுள்ள நிலையில் அதில் உயிரச்சுறுத்தல் விடுக்கும் குரல் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணை மேற்கொண்டு குறித்த சந்தேகத்திற்குரியவரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




