செய்திகள்

ஜனாதிபதி , பிரதமர் நேற்று இரவு அவசர சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று இரவு விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்கவும் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உழல் விசாரணைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை தொடர்ந்து இருவருக்குமிடையே நடைபெற்ற முதலாது சந்திப்பு இதுவாகும். -(3)