ஜனாதிபதி மலேசியாவுக்கு பயணம்
மலேசிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்புக்கமைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாளை 15 ஆம் திகதி மலேசியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை, மலேசிய நாடுகளுக்கிடையிலான தூதரக தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவு கண்காட்சி போன்றவற்றிலும் ஜனாதிபதி பங்குபற்றுவார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் மிக்க புதிய வர்த்தக முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் இருதரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை விருத்தி செய்யும் நோக்குடன் மலேசிய மன்னர் மற்றும் பிரதமர் ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார். -(3)




