செய்திகள்

ஜனாதிபதி மீதான அவுஸ்திரெலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக சீ.ஐ.டி விசாரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவுஸ்திரெலிய நிறுவனமொன்றிடமிருந்து அரசியல் நன்கொடையை பெற்றுக்கொள்ள முற்பட்டதாக தெரிவித்து அவுஸ்திரேலிய ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பு சீ.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘இந்த விடயம் தொடர்பில் ஆராயும் பொறுப்பு சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை மற்றும் இதை வெளியிட்டது யார் என்பது தொடர்பிலும் ஆராயும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இது உண்மையான செய்தி அறிக்கையா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.  -(3)