செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக அவரை பதவிக்கு கொண்டு வந்த சிவில் அமைப்புகளே போர்க்கொடி

ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக முன்னின்ற சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றத்திற்கு அழைத்தமை தொடர்பாகவும் மற்றும் சீ.ஐ.டி , எப்.சீ.ஐ.டி மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியன அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்றதா என்ற கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தே சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்கள் அவருக்கு எதிராக தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளன.
இதன்படி அந்த அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டன.
ஜனாதிபதி மகிந்த குடும்பத்தை பாதுகாப்பது போன்ற செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் அவரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவரால் வெளியிடப்பட்ட கருத்துக்கு கண்டத்தை வெளியிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)