ஜனாதிபதி மைத்திரிபால-ஜெர்மன் ஜனாதிபதி சந்திப்பு
ஜெர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஒக்கீம் கொக்கை சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பர்லீனிலுள்ள பெல்வியு மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜெர்மன் ஜனாதிபதி அமோக வரவேற்பளித்ததுடன்,கடந்த 5 தசாப்த காலமான ஜெர்மனால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதி உதவி தொடர்பில் தனது இதயபூர்வமான நன்றிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்லும் இலங்கையின் எதிர்காலத்திற்கு தமது அரசால் வழங்கக்கூடிய அதியுட்ச பங்களிப்பை தாம் பெற்றுக் கொடுப்பதாக இதன்போது ஜெர்மன் ஜனாதிபதி ஒக்கீம் கொக் உறுதியளித்துள்ளார்.
n10








