ஜனாதிபதி மைத்திரியின் கருத்தை வரவேற்கும் கோதாபய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை வரவேற்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய தெரிவித்துள்ளார்.
அவர் காலம் தாழ்த்தியாவது உண்மையை புரிந்துகொண்டமைக்கு தனது மகிழ்சியை தெரிவித்துக்கொள்வதாகவும் கோதாபய தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதிக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்குமிடையே எவ்வித ஒப்பந்தங்களும் கிடையாது எனவும் ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக அவரை விமர்சித்து கருத்துக்கள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீ.பீ.சி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.




